நானே வருவேன் பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ?

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் நானே வருவேன் படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க படத்தின் இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் படத்திலிருந்து புதிய புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் . இந்நிலையில் நானே வருவேன் படத்தின் முதல் பாடல் பற்றி தகவல் வெளியாகி உள்ளது .

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 31 அன்று படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது . பொதுவாகவே செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் வெளிவரும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் எனவே இந்த பாடலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது .

Share.