‘பிக் பாஸ்’ கவின் – ‘பிகில்’ அம்ரிதா நடிக்கும் ‘லிப்ட்’… ரிலீஸானது மிரட்டலான மோஷன் போஸ்டர்!

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸான நடிகர் கவின் நடிக்கும் புதிய படம் ‘லிப்ட்’. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸுக்க்காக நடிகர் கவினின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இன்று (மார்ச் 5-ஆம் தேதி) இப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

மிரட்டலான இந்த மோஷன் போஸ்டர் கவின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும்,படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மோஷன் போஸ்டரை வெளியிட்ட பாப்புலர் இயக்குநர்களான நெல்சன், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து, ரவிக்குமார், வெங்கட் பிரபு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்க, ஹீரோயினாக ‘பிகில்’ படம் மூலம் ஃபேமஸான அம்ரிதா ஐயர் நடித்து வருகிறாராம். பிரிட்டோ மைக்கேல் இசையமைத்து வரும் இப்படத்திற்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஜி.மதன் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Share.