‘பிக் பாஸ்’ கவின் – ‘பிகில்’ அம்ரிதா இணைந்து நடித்துள்ள ‘லிப்ட்’… ரிலீஸானது மிரட்டலான ட்ரெய்லர்!

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸான நடிகர் கவின் நடிக்கும் புதிய படம் ‘லிப்ட்’. சமீபத்தில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் கவின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்க, ஹீரோயினாக ‘பிகில்’ படம் மூலம் ஃபேமஸான அம்ரிதா ஐயர் நடித்துள்ளாராம். பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.மதன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்க்காக நடிகர் கவினின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று இப்படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தது. இந்நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லரை டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

 

Share.