‘பிக் பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸான நடிகர் கவின் நடித்துள்ள புதிய படம் ‘லிப்ட்’. இந்த படத்தின் ரிலீஸுக்க்காக நடிகர் கவினின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இப்படம் இன்று (அக்டோபர் 1-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்க, ஹீரோயினாக ‘பிகில்’ படம் மூலம் ஃபேமஸான அம்ரிதா ஐயர் நடித்துள்ளாராம். பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.மதன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தை ‘EKAA எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்போது, இந்த படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Share.