புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் வாங்கிய ‘பிக் பாஸ் 4’ ஆஜித்… விலை என்ன தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 3’ மூலம் ஃபேமஸானவர் ஆஜித். இவர் தான் அந்த சீசனின் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ‘திக்கி திணறுது’ என்ற பாடலை பாடினார் ஆஜித்.

2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பூவரசம் பீப்பி’. இந்த படத்தை இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியிருந்தார். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான அருள்தேவ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த மூன்று பாடல்களை ஆஜித் தான் பாடியிருந்தார்.

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி கடந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆஜித்தும் கலந்து கொண்டார். தற்போது, ஆஜித் புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஆஜித்தே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இக்காரின் விலை ரூ.18.39 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

 

Share.