பிரபல சீரியலின் சீசன் 2-வில் ஹீரோயினாக நடிக்கப்போகும் ‘பிக் பாஸ் 4’ நடிகை யார் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கேப்ரில்லா. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை கேப்ரில்லா உட்பட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற ஷோவிலும் கலந்து கொண்டார் கேப்ரில்லா.

இந்நிலையில், நடிகை கேப்ரில்லா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய சீரியலுக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஃபேமஸான சீரியல் ‘ஈரமான ரோஜாவே’. இந்த சீரியலின் சீசன் 2-வில் தான் கேப்ரில்லா ஹீரோயினாக நடிக்கப்போகிறாராம். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.