தனக்கு கொடுத்த விருதையே திருப்பி கொடுத்த ‘பிக் பாஸ் 4’ பாலாஜி… இது தொடர்பாக அனிதாவின் இன்ஸ்டா பதிவு!

பிரபல மாடலான பாலாஜி முருகதாஸ், மிஸ்டர் இண்டர்நேஷனல், மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டவர். இவர் சினிமாவிலும் கால் பதிக்க ஆசைப்பட்டு, ‘டைசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளாராம். இந்த படம் சில காரணங்களால் இதுவரை வெளியாகவே இல்லை.

இதனைத் தொடர்ந்து ‘கரோலின் காமாட்சி’ என்ற ‘ஜீ 5’ வெப் சீரிஸில் நடித்தார் பாலாஜி முருகதாஸ். மீனா ஹீரோயினாக நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. சமீபத்தில், பாலாஜி முருகதாஸுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரபல இணையதளம் ஒன்று நடத்திய விருது வழங்கும் விழாவில் பாலாஜி முருகதாஸுக்கு விருது கொடுக்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் பாலாஜி அந்த இணையதளத்தின் விமர்சகர் தொடர்பாக பேசியிருக்கிறார். இதனால், இவ்விருது நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பான போது பாலாஜி பேசிய வீடியோவை கட் செய்துள்ளனர்.

ஆகையால், தற்போது பாலாஜி இவ்விருதினை திருப்பி தரப்போவதாக கூறியிருக்கிறார். பாலாஜிக்கு ஆதரவாக அனிதா சம்பத்தும் இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாலாஜி குறிப்பிட்ட அந்த விமர்சகரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரனும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.


Share.