பிரபல ஹீரோவின் ஆக்ஷன் த்ரில்லர் படம்… ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 4’ அறந்தாங்கி நிஷா!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார்.

தற்போது, ‘பிக் பாஸ் 4’ போட்டியாளரான அறந்தாங்கி நிஷா நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் சாம் ஆண்டன் இயக்க, ஹீரோவாக அதர்வா நடிக்க உள்ளாராம். அதர்வாவுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளார். மேலும், அருண் பாண்டியன், ராகுல் தேஜ் ஷெட்டி, அழகம் பெருமாள், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இதில் அறந்தாங்கி நிஷாவிற்கு மிக முக்கிய ரோலாம். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் 8-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்க உள்ளனர். மொத்த ஷூட்டிங்கையும் ஒரே ஷெடியூலில் முடிக்க ப்ளான் போட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

Share.