தந்தையின் மறைவுக்கு பிறகு ‘பிக் பாஸ் 4’ பாலாஜியின் முதல் இன்ஸ்டா போஸ்ட்!

பிரபல மாடலான பாலாஜி முருகதாஸ், மிஸ்டர் இண்டர்நேஷனல், மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டவர். இவர் சினிமாவிலும் கால் பதிக்க ஆசைப்பட்டு, ‘டைசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளாராம். இந்த படம் சில காரணங்களால் இதுவரை வெளியாகவே இல்லை.

இதனைத் தொடர்ந்து ‘கரோலின் காமாட்சி’ என்ற ‘ஜீ 5’ வெப் சீரிஸில் நடித்தார் பாலாஜி முருகதாஸ். மீனா ஹீரோயினாக நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. சமீபத்தில், பாலாஜி முருகதாஸுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். நேற்று முன் தினம் (பிப்ரவரி 2-ஆம் தேதி) பாலாஜி முருகதாஸின் தந்தை இயற்கை எய்தினார். தற்போது, பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “லைஃப்ல எவ்ளோ பிரச்சனைகள் வந்தாலும், யார் என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு தீர்வு இருக்கு ‘சரி வச்சுக்கோங்க’ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும். உங்களுடைய அன்பிற்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.