கமலுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ‘பிக் பாஸ் 4’ பிரபலம்… தீயாய் பரவும் ஸ்டில்!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோவை தெற்கு பகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

தற்போது, நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கு ஆதரவாக ‘பிக் பாஸ்’ சீசன் 4 போட்டியாளரும், நடிகருமான சுரேஷ் சக்கரவர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்லை நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியே அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.