‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். தற்போது, ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்து கொண்ட இந்த 17 போட்டியாளர்களுக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

1.நடிகர் ரியோ ராஜ் – ரூ.2 லட்சம்

2.நடிகை சனம் ஷெட்டி – ரூ.1.5 லட்சம்

3.நடிகை ரேகா – ரூ.1.5 லட்சம்

4.மாடல் பாலாஜி முருகதாஸ் – ரூ.1.5 லட்சம்

5.செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் – ரூ.1 லட்சம்

6.நடிகை ஷிவானி நாராயணன் – ரூ.2 லட்சம்

7.நடிகர் ஜித்தன் ரமேஷ் – ரூ.2 லட்சம்

8.பாடகர் வேல்முருகன் – ரூ.1.5 லட்சம்

9.நடிகர் ஆரி – ரூ.2 லட்சம்

10.மாடல் சோமசேகர் – ரூ.1 லட்சம்

11.நடிகை கேப்ரில்லா – ரூ.1 லட்சம்

12.விஜய் டிவி அறந்தாங்கி நிஷா – ரூ.2 லட்சம்

13.நடிகை ரம்யா பாண்டியன் – ரூ.2 லட்சம்

14.நடிகை சம்யுக்தா கார்த்திக் – ரூ.1.5 லட்சம்

15.நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி – ரூ.1.5 லட்சம்

16.’சூப்பர் சிங்கர்’ ஆஜித் – ரூ.1 லட்சம்

17.தொகுப்பாளினி அர்ச்சனா – ரூ.2 லட்சம்

Share.