இன்று ரிலீஸான ‘களத்தில் சந்திப்போம்’… ஜித்தன் ரமேஷுக்காக ஒன்றிணைந்த ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள்!

என்.ராஜசேகர் இயக்கியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் ஜீவா – அருள்நிதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், முக்கிய ரோல்களில் பிரியா பவானி ஷங்கர், மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்க, டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இது தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 90-வது படைப்பாம். சமீபத்தில், இதன் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இன்று (பிப்ரவரி 5-ஆம் தேதி) இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த ‘பிக் பாஸ்’ சீசன் 4 போட்டியாளர்களான சுரேஷ் சக்கரவர்த்தி, கேப்ரில்லா, ரேகா, ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அனிதா சம்பத் வெகுவாக பாராட்டி பேசியுள்ளனர்.

இவர்கள் பேசிய வீடியோ பதிவு வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. ‘பிக் பாஸ்’ சீசன் 4-யில் கலந்து கொண்ட ஜித்தன் ரமேஷ், இப்படத்தின் இணை தயாரிப்பாளர் மட்டுமின்றி, ஹீரோ ஜீவாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், தான் அவருடன் கலந்து கொண்ட அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் நேற்று இரவு சென்னையில் ஸ்பெஷல் ஷோ போட்டு காண்பிக்கப்பட்டதாம்.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

 

View this post on Instagram

 

A post shared by Balaji Murugadoss fp (@bala_forever_)

Share.