புதிய BMW கார் வாங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… விலை என்ன தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு சமீபத்தில் அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

தற்போது, நடிகை ஷிவானி நாராயணன் புதிய BMW கார் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஷிவானி நாராயணனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், BMW கார் அருகில் நிற்பது போன்ற சில ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இக்காரின் விலை ரூ.1.50 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Share.