பர்த்டே பார்ட்டி… சோமசேகருக்காக ஒன்றிணைந்த ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில், சோமசேகருக்காக அனைத்து ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்களும் ஒன்றிணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் சோமசேகரின் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, அப்பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததுடன், பர்த்டே பார்ட்டியில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸையும் சோமசேகர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த பர்த்டே பார்ட்டியில் மற்ற ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்களும் கலந்து கொண்டனராம்.

 

View this post on Instagram

 

A post shared by Som Shekar (@somshekar_)

Share.