‘பிக் பாஸ் 4’ மூலம் ஃபேமஸான நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியின் புதிய பட அறிவிப்பு… குஷியான ரசிகர்கள்!

ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ படம் கடந்த ஆண்டு (2020) நவம்பர் 24-ஆம் தேதி OTT-யிலும், ‘மாஸ்டர்’ படம் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளிலும் ரிலீஸானது.

இவ்விரண்டு படங்களும் அர்ஜுன் தாஸின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. சமீபத்தில், அர்ஜுன் தாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் வசந்த பாலன் இயக்குகிறார். இந்த படத்தை ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது, இதில் ‘பிக் பாஸ்’ சீசன் 4 மூலம் ஃபேமஸான நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியும், ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் ஃபேமஸான அர்ஜுன் சிதம்பரமும் முக்கிய ரோல்களில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோஸ் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

Share.