அடுத்த வார தலைவர் யார்?… ‘பிக் பாஸ்’ கொடுத்த டாஸ்க்கால் அடித்துக் கொண்ட போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். பின், இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அடுத்த வார தலைவருக்கான போட்டியாளர்களை தேர்வு செய்வதற்காக பிக் பாஸ் ‘செண்பகமே செண்பகமே’ என்ற டாஸ்க்கை கொடுக்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.