‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பிக் பாஸ் 5’ தாமரைச்செல்வி & ஐக்கி பெர்ரி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப், அமீர், சஞ்சீவ் ஆகிய 20 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகப்போகிறது. ‘பிக் பாஸ்’யின் அனைத்து சீசன்களிலும் வந்த பிரபலங்களில் சிலர் கலந்து கொள்ளப்போகும் இந்நிகழ்ச்சி இம்மாத (ஜனவரி) இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படுமாம்.

இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கப்போகிறாராம். இந்நிலையில், ‘பிக் பாஸ் 5’ போட்டியாளரான ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘புஷ்பா’ என்ற படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு ஐக்கி பெர்ரியும், ‘பிக் பாஸ்’ சீசன் 5-யின் இன்னொரு போட்டியாளரான தாமரைச்செல்வியும் இணைந்து சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளனர்.

Share.