“பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம்”… PSBB பள்ளி விவகாரம் குறித்து ஆரி ட்வீட்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இப்போது நடிகர் ஆரி நடிப்பில் ‘அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான்’ மற்றும் இயக்குநர் அபின் இயக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, இது தொடர்பாக ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆசிரியர் போர்வையில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம். ராஜகோபாலன் போன்றோருக்கு சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை இது போன்றோருக்கு பாடமாக இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

Share.