முன்னாள் காதலர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘பிக் பாஸ்’ நடிகை… எதுக்கு தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-யில் போட்டியாளராக இருந்தவர் ஜூலி. இவர் ‘பிக் பாஸ்’-யில் கலந்து கொள்வதற்கு முன்பே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஃபேமஸானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ;’பிக் பாஸ்’ ஜூலி ஹீரோயினாக அவதாரம் எடுத்து விட்டார். இப்போது ஜூலி நடிப்பில் ‘அம்மன் தாயி’ மற்றும் ‘Dr.S.அனிதா MBBS’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், மனீஷ் என்பவர் மீது நடிகை ஜூலி அண்ணாநகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில் “நடிகை ஜூலியின் முன்னாள் காதலர் மனீஷிடம் இருந்து அவருக்கு ஏற்கனவே தான் வாங்கி கொடுத்த தங்க செயின், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை திருப்பி வாங்கித் தர வேண்டும்” என்று ஜூலி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் மனீஷிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மனீஷ் அப்பொருட்களை திருப்பி ஜூலியிடம் கொடுத்து விடுவதாக கூறி விட்டாராம்.

Share.