‘பிக் பாஸ்’ நடிகை லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸானவர் லாஸ்லியா. இவர் நடிப்பில் ‘கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பிரண்ட்ஷிப்’ படம் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதனை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் – ஷாம் சூர்யா இணைந்து இயக்கியிருந்தனர்.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹர்பஜன் சிங், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இன்னொரு படமான ‘கூகுள் குட்டப்பா’வை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்குகின்றனர். இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ தர்ஷன், யோகி பாபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (மார்ச் 23-ஆம் தேதி) நடிகை லாஸ்லியாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share.