அடேங்கப்பா… ‘பிக் பாஸ்’ நடிகை மும்தாஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மும்தாஜ். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே ‘மோனிஷா என் மோனலிசா’ தான். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் இயக்கியிருந்தார். ‘மோனிஷா என் மோனலிசா’ படத்துக்கு பிறகு நடிகை மும்தாஜுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால்தான் காதலா, வேதம், சாக்லெட், மிட்டாமிராசு, அழகான நாட்கள், விவரமான ஆளு, ஏழுமலை, தத்தி தாவுது மனசு, மகா நடிகன், லண்டன், ஜெர்ரி, வீராசாமி, ராஜாதி ராஜா’ என தமிழ் படங்கள் குவிந்தது.

மும்தாஜ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு இளசுகளின் லைக்ஸை குவித்தார். இந்நிலையில், நடிகை மும்தாஜின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.