பட வாய்ப்பே இல்லாத ‘பிக் பாஸ்’ நடிகை… அதுக்குன்னு அந்த மாதிரி விஷயத்துக்கு இவ்ளோ சம்பளமா?

ஒரு பொலிட்டிக்கல் சட்டையர் படம் மூலம் ஃபேமஸானவர் தான் அந்த நடிகை. அவர் நடித்த அந்த முதல் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. அதன் பிறகு இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அந்த நடிகைக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

பின், அதிக பட வாய்ப்புகள் வராததால், டாப் ஹீரோ ஒருவர் பிரபல டிவி சேனலில் தொகுத்து வழங்கிய ஒரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சமீபத்தில், ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பதற்கே பெரிய தொகை கேட்டதும் இந்த நடிகை தான்.

இப்போது ஒரு படம் மட்டும் கைவசம் வைத்திருக்கும் இந்த நடிகை பல பொருள்களை ஆன்லைனில் விற்பதற்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பொருள் பற்றி குறிப்பிட்டு தொடர்ந்து போஸ்ட் போட்டு வருகிறாராம். தற்போது, ஒரு பிரபல நிறுவனம் இந்த மாதிரி அவர்களது பொருள் குறித்த போஸ்ட்டை இன்ஸ்டாவில் போட அந்த நடிகையை அணுகியிருக்கிறது. அந்த நடிகை அப்போஸ்ட்டை போட ரூ.10 லட்சம் சம்பளம் கேட்டாராம்.

Share.