குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘பிக் பாஸ்’ புகழ் சுஜா வருணி!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சுஜா வருணி. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘+2’. இந்த படத்துக்கு பிறகு ‘இளசு புதுசு ரவுசு’ என்ற படத்தில் நடித்தார். பின், ‘வர்ணஜாலம்’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.

‘வர்ணஜாலம்’ படத்துக்கு பிறகு நடிகை சுஜா வருணிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கஸ்தூரிமான், உள்ளக் கடத்தல், நாளை, திருத்தம், அடாவடி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், வைத்தீஸ்வரன், எங்கள் ஆசான், பென்சில், கிடாரி, குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

சுஜா வருணி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 2018-ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி தேவ்வை திருமணம் செய்து கொண்டார் சுஜா வருணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ‘பிக் பாஸ்’ சீசன் 1-யில் சுஜா வருணியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, சுஜா வருணி அவரது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

1

2

3

4

5

6

7

8

Share.