கமல் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் ‘விக்ரம்’… விஜய் சேதுபதிக்கு ஜோடி ‘பிக் பாஸ் 4’ நடிகையா?

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, ஜீத்து ஜோசப்பின் ‘பாபநாசம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் சென்னையில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது. சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்கின்றனர்.

மேலும், கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது, இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ‘பிக் பாஸ் 4’ புகழ் ஷிவானி நாராயணன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.