“ஆட்டோவுக்கு கொடுக்க கூடவா காசு இல்லை?”… ‘பிக் பாஸ்’ நடிகையால் கடுப்பான ஆட்டோ டிரைவர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. இவருக்கு அமைந்த முதல் படமே மலையாள திரையுலகில் தான். அதன் பிறகு தமிழ் சினிமாவில் கால் பதித்து ‘வி’ நடிகரின் காமெடி படத்தில் நடித்தார். அந்த படத்தில் அந்த நடிகையின் நடிப்பு ரசிகர்கள் லைக்ஸ் போடும் வகையில் அமைந்தது.

அந்த காமெடி படத்தின் வெற்றியால் அந்த நடிகைக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. பின், டாப் ஹீரோ பிரபல டிவி சேனலில் தொகுத்து வழங்கும் ஒரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார்.

இப்போது அந்த நடிகையின் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில், வளசரவாக்கத்தில் இருந்து அவசர அவசரமாக ஒரு ஆட்டோவை பிடித்து பிரபல டப்பிங் ஸ்டுடியோவிற்கு அந்த நடிகை சென்றுள்ளார். பின், ஆட்டோவில் இருந்து இறங்கிய நடிகை, “உடனே வந்து பணம் தருகிறேன்” என்று கூறிவிட்டு ஸ்டுடியோவிற்குள் சென்று விட்டாராம்.

அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்த ஆட்டோ டிரைவர் அங்கயே வெயிட் பண்ணியிருக்கிறார். ஆனால், அந்த நடிகையோ ஸ்டுடியோவில் இருந்து வெளியே வரவே இல்லையாம். இதனை அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் (சினிமாவில் பணியாற்றி வருபவர்) ஆட்டோ டிரைவரிடம் சென்று அந்த நடிகை ஆட்டோவில் வந்ததுக்கான ரூ.150-ஐ கொடுத்து அவரை அனுப்பி வைத்தாராம்.

Share.