தோழியை படுக்கைக்கு அழைத்த நபர்… உண்மையை போட்டுடைத்த ‘பிக் பாஸ் 4’ அனிதா!

ஆரம்பத்தில் ‘நியூஸ் 7’ சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு சன் டிவியில் நியூஸ் வாசிக்க என்ட்ரியானார். அங்கு பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். அனிதா சம்பத்திற்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ‘2.0, சர்கார், காப்பான், மாஸ்டர்’ போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அனிதா. சமீபத்தில், அனிதா சம்பத்திற்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

தற்போது, அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டில்லில் ஒரு நபர் “சினிமாவில் adjustment தான் முக்கியம், ஈஸியா விஜய் டிவில சான்ஸ் கிடைக்கும்” என்று ஒரு பெண்ணுக்கு மெசேஜ் மூலம் படுக்கைக்கு அழைத்துள்ளார். இது என்னுடைய தோழிக்கு வந்த மெசேஜ், இந்த மாதிரி பேசுபவர்களை நம்பி நடிக்க ஆசைப்படும் பெண்கள் யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்று அனிதா சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Share.