“கணவரை விவாகரத்து செய்யப்போகிறார்” என பரவிய செய்தி… கடுப்பான ‘பிக் பாஸ்’ அனிதா!

ஆரம்பத்தில் ‘நியூஸ் 7’ சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு சன் டிவியில் நியூஸ் வாசிக்க என்ட்ரியானார். அங்கு பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். அனிதா சம்பத்திற்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ‘2.0, சர்கார், காப்பான், மாஸ்டர்’ போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அனிதா. அதன் பிறகு அனிதா சம்பத்திற்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

இந்நிலையில், அனிதா சம்பத் அவரது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக அனிதா சம்பத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கூடவே இருந்தியே செவ்வாழ moment… content இல்லன்னு இந்த லெவலுக்கு இறங்கிட்டீங்களா gossip pages… தினமும் யூடியூப்ல ஒண்ணா vlog போடுறதெல்லாம் அட்மின் பார்க்கிறதில்ல போல” என்று கூறியுள்ளார்.

Share.