கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ தர்ஷன் – லாஸ்லியா நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மலையாள திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இந்த படத்தை இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கியிருந்தார். இதில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் சாஹிர், சைஜூ குருப் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மெகா ஹிட்டானது. தற்போது, இப்படம் தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற டைட்டிலில் ரீமேக்காகுகிறது.

இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான தர்ஷன் – லாஸ்லியா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்குகின்றனர். ஜிப்ரான் இதற்கு இசையமைத்து வருகிறார். இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

Share.