பிக்பாஸ் தர்ஷனின் முதல் ரிலீஸ் எப்போது?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் தர்ஷன். இவர்தான் டைட்டில் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் இவர் வெளியேற்றப்பட்டு முகேன் டைட்டில் வின்னராக வந்தார்.

இந்நிலையில் தர்ஷன் வெளியேறிய அன்று கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க தர்ஷனுக்கு வாய்ப்பளித்து ஒப்பந்த பத்திரத்தையும் கொடுத்தார்.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள “இந்தியன் 2” திரைப்படத்திலும் தர்ஷனுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது தர்ஷன் நடித்துள்ள “தாய்க்குப்பின் தாரம்” என்ற மியூசிக் ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளதாகவும் இதில் இவருக்கு ஜோடியாக சீரியலில் நடிக்கும் நடிகை ஆயிஷா நடித்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த மியூசிக் ஆல்பத்தின் டீசர் ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை பத்தரை மணிக்கு வெளியாக உள்ளதாக தற்போது தர்ஷன் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். தரன்குமார் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளாராம். இதில் நடித்ததால் தன் கனவு நனவாகி உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

Share.