சூப்பராக நடனமாடி அசத்திய ‘பிக் பாஸ்’ கேப்ரில்லா… தீயாய் பரவும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கேப்ரில்லா. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை கேப்ரில்லா உட்பட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற ஷோவில் கலந்து கொண்டார் கேப்ரில்லா.

‘பிக் பாஸ்’யின் அனைத்து சீசன்களிலும் வந்த பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி கடந்த மே மாதம் 2-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், கேப்ரில்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஒரு பாடலுக்கு நடிகை கேப்ரில்லா சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

Share.