‘பீஸ்ட்’ பட பூஜையின் போது ‘பிக் பாஸ்’ கவினிடம் அந்த விஷயத்தை சொல்லி பாராட்டிய விஜய்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

Bigg Boss Kavin Talks About Vijay1

கடந்த ஜூன் 21-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய ஷெடியூல் ஷூட்டிங் சென்னையில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த செட்டில் விஜய் – பூஜா ஹெக்டே டூயட் பாடி ஆடும் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இந்நிலையில், ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகர் கவின் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் “பீஸ்ட் படத்தின் பூஜையின் போது, விஜய் சார் என்னிடம் உங்களுடைய ‘அஸ்கு மாரோ’ பாடல் பார்த்தேன். சூப்பரா இருந்துச்சுன்னு சொன்னார்” என்று கூறியுள்ளார். ‘பீஸ்ட்’ படத்தில் கவின் உதவி இயக்குநராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Share.