‘பிரண்ட்ஷிப்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… கொண்டாட்டத்தில் ‘பிக் பாஸ்’ லாஸ்லியா ரசிகர்கள்!

பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸானவர் லாஸ்லியா. இப்போது இவர் நடிப்பில் ‘கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்குகின்றனர்.

இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ தர்ஷன், யோகி பாபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். ‘பிரண்ட்ஷிப்’ படத்தை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் – ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ளனர். இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹர்பஜன் சிங், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்தனர். தற்போது, இந்த படத்தை வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.