‘பிக் பாஸ்’ லாஸ்லியா – ஹர்பஜன் சிங் இணைந்து நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸானவர் லாஸ்லியா. இவர் நடிப்பில் ‘கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்குகின்றனர். இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ தர்ஷன், யோகி பாபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

இன்னொரு படமான ‘பிரண்ட்ஷிப்’ இன்று (செப்டம்பர் 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் – ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ளனர். இதில் முக்கிய ரோல்களில் ஹர்பஜன் சிங், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு உதயகுமார் இசையமைத்துள்ளார், சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.