சேலையில் அழகு தேவதையாக ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… குவியும் லைக்ஸ்!

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸானவர் லாஸ்லியா. இப்போது இவர் நடிப்பில் ‘கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்குகின்றனர். இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ தர்ஷன், யோகி பாபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

‘பிரண்ட்ஷிப்’ படத்தை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் – ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ளனர். இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹர்பஜன் சிங், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

Share.