‘ஜோக்கர்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ‘ஆண் தேவதை’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
சமீபத்தில், நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது ரம்யா பாண்டியன், டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கி வருகிறார்.
இதில் ரம்யா பாண்டியனுடன் இணைந்து பாப்புலர் நடிகை வாணி போஜனும் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
View this post on Instagram
View this post on Instagram
Comments