ஜிகுஜிகுவென மின்னும் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ சம்யுக்தா!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை சம்யுக்தா உட்பட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார்.

இப்போது, நடிகை சம்யுக்தா நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படம், சசிக்குமார் நடிக்கும் படம் என மூன்று படங்களும் மற்றும் ‘குத்துக்கு பத்து’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் இணைந்து நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தை சன் டிவியில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பவும், அதற்கு அடுத்த நாள் (செப்டம்பர் 11-ஆம் தேதி) ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்யவும் ப்ளான் போட்டுள்ளனர். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் கெளதம் கார்த்திக் – ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க உள்ளனர். சசிக்குமார் படத்தை இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கி வருகிறார். ‘குத்துக்கு பத்து’ வெப் சீரிஸை விஜய் வரதராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில், நடிகை சம்யுக்தா இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.