‘விஜய் ரியல் ஹீரோவா? ரீல் ஹீரோவா?’ … ‘பிக் பாஸ்’ வனிதாவின் இன்ஸ்டா பதிவு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. அது தான் ‘சந்திரலேகா’. இந்த படத்துக்கு பிறகு நடிகை வனிதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

வனிதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, வனிதா விஜயகுமார் நடிப்பில் ஆறு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், டாப் ஹீரோவான ‘தளபதி’ விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் தனக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய்-க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதித்தனர். தற்போது, இது தொடர்பாக வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ரியல் ஹீரோவுக்கும் ரீல் ஹீரோவுக்கும் வித்தியாசம் இருக்கு.. ‘தளபதி’ விஜய் நீங்க எப்பவுமே ரியல் ஹீரோ தான்” என்று கூறியுள்ளார்.

Share.