புதிய படத்துக்கு பூஜை போட்ட ‘பிக் பாஸ்’ வனிதா… டைட்டிலே பயங்கரமா இருக்கே!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. அது தான் ‘சந்திரலேகா’. இந்த படத்துக்கு பிறகு நடிகை வனிதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

வனிதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, வனிதா விஜயகுமார் நடிப்பில் நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுகிறேன் என்று குறிப்பிட்டு வனிதா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், வனிதா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘கொடூரன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்துக்கான பூஜை இன்று (ஜூலை 14-ஆம் தேதி) போடப்பட்டதாம். இந்த தகவலை வனிதாவே இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில் ஹீரோ – ஹீரோயினாக வெற்றி – வித்யா பிரதீப் நடிக்க உள்ளனர்.

Share.