பிக்பாஸ் புகழ் நடிகையின் மார்டன் போட்டோஷூட்!

2015ஆம் ஆண்டு நகுள் நடிப்பில் வெளியான “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்துள்ளார்.

தற்போது மிளிர், கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேக்கா, பொல்லாத உலகில் பயங்கர கேம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்2 எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் அடைந்தார்.

இவர் தற்போது போட்டோ ஷூட் ஒன்றை மிகவும் மாடர்னாக எடுத்து அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரைப்படங்களில் மிகவும் ஹோம்லியாக நடித்திருந்த இவரின் இந்த மார்டன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CFtujYjj-99/?igshid=gnstap0axpff

Share.