வரும் நெகட்டிவ் கமெண்ட்களை தடுக்க பிக்பாஸ் லாஸ்லியா எடுத்த முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின்பு பிரபலமானவர்கள் பட்டியல் ஏராளம். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் பிரபலமான ஒருவர்தான் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். மாடலிங் துறையில் ஜொலித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிவி ஆங்கரிங் செய்ய தொடங்கினார்.

தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் கதவை தட்டி வருகிறது. இந்நிலையில் லாக்டவுனில் மற்ற நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவது போன்று இவரும் போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு மறைமுகமாக கவினை தாக்கியும் வருகிறார். நடிகர் கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது காதலித்தார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

வெளியே வந்ததும் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இதனால் தான் அவர் தனது கேப்ஷனில் அவரைத் தாக்கி வருவதாகவும் ரசிகர்கள் கோவமாக உள்ளார்கள்.

இதையடுத்து தனக்கு அதிகமாக நெகடிவ் கமெண்ட்கள் வருவதால் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செக்ஸை முடக்கி உள்ளார் நடிகை லாஸ்லியா. இதன்மூலம் கவின் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தப்பித்துள்ளார். இருப்பினும் டுவிட்டரில் ரசிகர்கள் கமெண்ட் செய்துதான் வருகிறார்கள்.

Share.