மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ‘பிகில்’ அனிதா… தொடை தெரிய கவர்ச்சி போஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரெபா மோனிகா ஜான். இவர் அறிமுகமான முதல் மலையாள படத்தில் நிவின் பாலி தான் ஹீரோவாக நடித்திருந்தார். அது தான் ‘ஜாகோபிண்டே சுவர்க்கராஜ்யம்’. அதன் பிறகு ‘பைப்பின் சுவட்டிலே பிரணயம்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரெபா மோனிகா ஜான்.

‘பைப்பின் சுவட்டிலே பிரணயம்’ படத்திற்கு பிறகு நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ஜெய்யின் ‘ஜருகண்டி’, ‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’, ஹரிஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’, மலையாள மொழியில் நிவின் பாலியின் ‘மைக்கேல்’, டொவினோ தாமஸின் ‘ஃபாரன்சிக்’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘பிகில்’ படத்தில் ‘அனிதா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து அப்ளாஸ் வாங்கினார் ரெபா மோனிகா ஜான். இப்போது, ரெபா மோனிகா ஜான் நடிப்பில் தமிழ் மொழியில் இரண்டு படங்களும், மலையாள மொழியில் இரண்டு படங்களும், கன்னட மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நடிகை ரெபா மோனிகா ஜான், ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ரெபா மோனிகா ஜான் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸை ரெபா மோனிகா ஜான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.