‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

யூ டியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். இப்போது இவரும் வெள்ளித்திரையில் என்ட்ரியாகியுள்ளார். இவர் இயக்கியிருக்கும் புதிய படத்துக்கு ‘ஆன்டி இண்டியன்’ (Anti Indian) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியதுடன் ‘ப்ளூ சட்டை’ மாறனே இசை அமைத்திருக்கிறாராம்.

இதில் ‘ப்ளூ சட்டை’ மாறனுடன் இணைந்து ராதாரவி, ‘பிக் பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, ‘ஆடுகளம்’ நரேன், முத்துராமன் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இதனை ‘மூன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ளார். இதன் ட்ரெய்லரை கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்திருந்தார்.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்தனர். தற்போது, படத்தை வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.