பாபி சிம்ஹாவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘வசந்த முல்லை’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பாபி சிம்ஹா. இப்போது பாபி சிம்ஹா நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வசந்த முல்லை’ என்ற படத்தை இயக்குநர் ரமணன் புருஷோத்தமா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.

இன்று (ஜூன் 25-ஆம் தேதி) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழுவினர் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமன்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

Bobby Simha's Vasantha Mullai Teaser1

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் ரெடியாகும் இந்த படத்தில் பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. ராஜேஷ் முருகேசன் இசையமைத்து வரும் இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Share.