நடிகர் ‘தல’ அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… கொந்தளித்த ரசிகர்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது, அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (மே 31-ஆம் தேதி) மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து “நடிகர் அஜித் வீட்ல வெடிகுண்டு வச்சிருக்கேன்” என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு நடிகர் அஜித்தின் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பின், இது வெறும் புரளி தான் என்று தெரிய வந்துள்ளது. இப்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Share.