வெளியானது புல்லட் வீடியோ பாடல் !!

ஆனந்தம் , ரன் , சண்டக்கோழி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் லிங்குசாமி. பையா படத்திற்கு பிறகு இவர் இயக்கிய வேட்டை , அஞ்சான் , சண்டக்கோழி 02 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சண்டக்கோழி 2 .
அந்த படமும் மோசமான விமர்சனங்களை பெற்றது .

இந்த நிலையில் தற்பொழுது இவர் “தி வாரியர் ” என்ற படத்தை தெலுங்கில் இயக்கி இருந்தார் . இந்த படத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்து இருக்கிறார் . இந்த படத்தினை ஸ்ரீநிவாஸ் சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து இருந்தது . “தி வாரியர் ” படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருந்தது .

இந்த படத்திலிருந்து வெளியான புல்லட் மற்றும் விசில் பாடல்களின் லிரிக் வீடியோ இணையத்தை கலக்கி இருந்தன . வாரியர் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . தற்போது புல்லெட் படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது .

Share.