‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘மெட்ராஸ்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் கேத்ரின் திரசா. தமிழில் அறிமுகமான முதல் படமே கேத்ரின் திரசாவுக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘மெட்ராஸ்’. இதில் ஹீரோவாக கார்த்தி நடிக்க, படத்தை பா.இரஞ்சித் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ‘கலையரசி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து அசத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் கேத்ரின் திரசா. ‘மெட்ராஸ்’ படத்துக்கு பிறகு நடிகை கேத்ரின் திரசாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2, அருவம்’ என தமிழில் படங்கள் குவிந்தது.

Catherine Tresa Takes First Dose Of Covid 19 Vaccine1

கேத்ரின் திரசா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும், ஒரு மலையாள படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை கேத்ரின் திரசா ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

1

Catherine Tresa Takes First Dose Of Covid 19 Vaccine2

2

Catherine Tresa Takes First Dose Of Covid 19 Vaccine3

Share.