அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட திரையுலக பிரபலங்கள்!

திரையுலகில் வலம் வரும் பல பிரபல நடிகர்கள், நடிகைகள் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துள்ளனர். அவர்களின் லிஸ்ட் இதோ…

1. பிரகாஷ் ராஜ் – போனி வர்மா :

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ் (வயது 56). இப்போது பிரகாஷ் ராஜ் நடிப்பில் ‘மேஜர், கே.ஜி.எஃப் 2, புஷ்பா, அண்ணாத்த, எனிமி, சர்காரு வாரி பாட்டா, பொன்னியின் செல்வன், கிளாப், திருச்சிற்றம்பலம்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் தன்னை விட 12 வயது சிறியவரான பிரபல நடன இயக்குநர் போனி வர்மாவை (வயது 43) 2010-ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

2. ஆர்யா – சாயிஷா :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா (வயது 40). இப்போது, ஆர்யா நடிப்பில் ‘எனிமி, அரண்மனை 3’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் தன்னை விட 17 வயது சிறியவரான பிரபல நடிகை சாயிஷாவை (வயது 24) 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

3. ஜெனிலியா – ரித்தேஷ் தேஷ்முக் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஜெனிலியா (வயது 34) ‘பாய்ஸ், சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை விட 9 வயது பெரியவரான பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை (வயது 42) 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

4. அசின் – ராகுல் ஷர்மா :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த அசின் (வயது 35) ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி, கஜினி, சிவகாசி, தசாவதாரம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை விட 7 வயது பெரியவரான ராகுல் ஷர்மா (வயது 42) என்பவரை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

5.அஜித் – ஷாலினி :

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித் (வயது 50). இப்போது அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அஜித் தன்னை விட 9 வயது சிறியவரான பிரபல நடிகை ஷாலினியை (வயது 41) 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

6. ஃபஹத் ஃபாசில் – நஸ்ரியா நசீம் :

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில் (வயது 39). தமிழில் ‘வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஃபஹத், இப்போது தமிழில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். ஃபஹத் தன்னை விட 13 வயது சிறியவரான பிரபல நடிகை நஸ்ரியா நசீமை (வயது 26) 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

7. பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பாபி சிம்ஹா (வயது 37). இப்போது பாபி சிம்ஹா நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘வசந்த முல்லை’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் தன்னை விட 6 வயது சிறியவரான பிரபல நடிகை ரேஷ்மி மேனனை (வயது 31) 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Share.