சந்தோஷ் சிவன் இயக்கத்தில் காமெடி படம் !

தளபதி , ரோஜா , இந்திரா , இருவர் போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் . இவர் நவராசா , அசோகா , ஹலோ போன்ற சில படங்களை இயக்கி உள்ளார் . இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்து ஒரு படம் தயாராகி உள்ளது .

சந்தோஷ் சிவன் இயக்கி உள்ள அந்த படத்திற்கு சென்டிமீட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் , மஞ்சு வாரியர் , யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . சசிகுமார் சிவகுரு இந்த படத்திற்கு வசனம் எழுதி உள்ளார் . சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் . லாரன்ஸ் கிஷோர் இந்த படத்தின் எடிட்டிங் செய்துள்ளார் .

நகைச்சுவை, அறிவியல் கலந்த கதையில் இந்த படம் உருவாகியுள்ளது . யோகி பாபு இந்த படத்தில் ரோபோவாக நடித்து இருக்கிறார் .நேற்று வெளியான இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் பலர் இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர் .மலையாளம் மொழியில் இந்த படம் உருவாகி இருக்கிறது . இந்த டிரைலரை 1.5 லட்சம் மக்கள் இதுவரை பார்த்து உள்ளனர் .

Share.