விஷாலின் சக்ரா படத்தின் மீது இருந்த தடை நீக்கப்பட்டதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஷால் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சக்ரா”. இந்தப் படம் விரைவில் OTTயில் வெளியாகும் என்று தற்போது விஷால் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக இயக்குனரான எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே ஆகிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர்ராஜா இசையில் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவலர்களாக நடித்துள்ளார்கள் என்றும், சுதந்திர தினத்தன்று நடக்கும் கொள்ளை சம்பவத்தை துப்பறியும் காவலர்களாக இவர்கள் நடித்துள்ளார்கள் என்றும் ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.

தற்போது இந்த படத்திற்கு முன்னர் விஷால் ஆக்சன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்வதாக விஷால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் படுதோல்வி அடைந்ததால் இதற்கான நஷ்டத்தை விஷால் ஏற்றுக் கொள்ளாமல் சக்ரா படத்தில் நடித்து விட்டதாகவும், தற்போது இதற்கான நஷ்ட ஈடாக 8 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே “சக்ரா” படத்தை OTTயில் வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என்றும் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது இந்த வழக்கிற்கும் சக்ரா படத்தின் வெளியீட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ள நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார். இதனால் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.