சக்ரா திரைப்படக் குழு வெளியிட்டுள்ள விஷாலின் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஷால் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சக்ரா”. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குனரான எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே ஆகிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர்ராஜா இசையில் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவலர்களாக நடித்துள்ளார்கள் என்றும், சுதந்திர தினத்தன்று நடக்கும் கொள்ளை சம்பவத்தை துப்பறியும் காவலர்களாக இவர்கள் நடித்துள்ளார்கள் என்றும் ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.

இந்த திரைப்படக்குழுவினர் தற்போது விஷாலின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இது விஷால் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Share.